முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிராக தோற்றதில் தன்னம்பிக்கையே பாழானது - டுபிளெசிஸ் கடும் ஏமாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

போர்ட் எலிசபெத் : இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்று அதிசயிக்க வைத்துள்ளது.

பெரிய அளவில் நம்பிக்கை பாழானது. இந்தத் தொடர் வரை உள்நாட்டில் நாங்கள்தான் தாதா, எங்களை வீழ்த்த முடியாது என்று நினைத்திருந்தோம். ஆனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் வேறு மாதிரிப் போய் விட்டது. நாங்கள் இலங்கை அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் என்கிறார்கள். அப்படியல்ல தயாரிப்பிலும் பயிற்சியிலும் நல்ல தயாரிப்பில்தான் இருந்தோம். நீண்ட சீசன் என்பதால் முடிவில் வீரர்கள் களைப்படைந்திருக்கலாம்.

மிகவும் ஏமாற்றகரமான தோல்வி. இது என் சொந்தக் கருத்து அணியின் பார்வையிலும் கூட அப்படித்தான் இருக்க முடியும். கடினமான பிட்ச்களை போட்டு எதிரணியினரை வறுத்தெடுக்கலாம் என்ற எண்ணம் நிச்சயமாக இல்லை. அணியில் இருப்பவர்கள் அப்படி நினைத்தால் அது ஒரு சாக்குப் போக்காகவே இருக்க முடியும். ஓய்வறையிலும் இப்படி யாரும் பேசி நான் பார்க்கவில்லை. கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் முடிவுகள் இப்போது விளையாடும் போட்டிகளில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தப் போவதில்லை.

ஒரு பேட்ஸ்மெனாக எங்கு சென்றாலும் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். இது நல்ல பிட்ச்தான். நான் பேட்டிங் செய்த போது கூட பேட்டிங்குக்குச் சாதகமாகவே இருந்தது, ஆனால் இரு அணிகளுமே இந்தத் தொடரில் மோசமாகவே பேட் செய்தன. 2 நாட்களில் 30 விக்கெட்டுகள் ஏன் விழுந்தன என்பதை என்னால் கூற முடியவில்லை. விக்கெட்டுகளை எளிதாகக் கொடுத்தோம், மன ரீதியாக மென்மையாக இருந்தோம்.

தொடர் முழுதும் எங்கள் பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகளைத் தூக்கி எறிந்தனர். பிட்சை நோக்கி யாரும் குறை கூறவில்லை. அணியிடத்தில்தான் மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. 99 சதவீத அவுட்டுகள் எளிதாகவே நாங்கள் விக்கெட்டுகளைக் கொடுத்ததால் விளைந்ததே. ஆகவே எங்களுக்குத்தான் ஆத்ம பரிசோதனை தேவைப்படுகிறது. இந்த இலங்கைப் பந்து வீச்சுக்கு எதிராக எங்கள் டாப் பேட்ஸ்மென்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. அதுதான் தோல்விக்குக் காரணம் என்றார் டுபிளெசிஸ

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து