Idhayam Matrimony

இந்திய பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

 லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.    

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.  

இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார். 

இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ என கூறினார். இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து