முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு நிறைவேறாது - பாக்.வெளியுறவு அமைச்சர் திமிர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடந்த 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரேசி, பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். பாகிஸ்தான் அணி வகுப்பு நாளான மார்ச் 23-ம் தேதி, சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது வரவுள்ளார். அதே போல், ஜெர்மன் மந்திரி ஹீகோ மாஸ் மார்ச் 12-ம் தேதி பாகிஸ்தான் வர உள்ளார். ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார். எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ ,அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது. புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதே வேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து