முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் - கிம் இன்று சந்திப்பு - ஹனோய் நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

டோங்டாங் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு நாளை நடைபெறுகிறது

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக கிம் ஜாங் அன், கடந்த 24-ம் தேதி பியாங்காங்கில் இருந்து சிறப்பு ரெயிலில் வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார். 

சீனா வழியாக நேற்று வியட்நாம் வருகை தந்த கிம் ஜாங் அன், ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டார். கிம் ஜாங் அன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். அதே போல், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபருடனான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்நாம் புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக, தனது டுவிட்டரில் பதிவிட்ட டிரம்ப், வடகொரிய அதிபருடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்து இருந்தார். டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்தித்து பேசும் டோங் டாங், நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து