முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன் 6 ஆண்டுகளை கடந்தும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : 2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன் 6 ஆண்டுகளை கடந்தும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. ஷெல்லி கடந்த 2013-ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்த போது, வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குழந்தைக்கு 2 சதவீத அளவுக்கே மூளை இருந்தது தெரியவந்தது.

எனவே கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அந்த தம்பதி அதனை விரும்பவில்லை. 2 சதவீத மூளையுடன் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு நோவா வெல் என பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தை பார்வையின்றி, பேசும் மற்றும் கேட்கும் திறனின்றி வளர்ந்தது. பின்னர், நோவாவை ஆஸ்திரேலிய மருத்துவர்களின் கண்காணிப்பில் பெற்றோர் ஒப்படைத்தனர். 3 வயதுக்குப் பின் நோவாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சையால், அவனது மூளை வளர்ச்சி விகிதம் அதிகமானது. அதனைத் தொடர்ந்து அவனுக்கு பார்வை, திரும்பக் கிடைத்தது. தற்போது 6 வயதாகும் நோவாவின் மூளை 80 சதவீத அளவை எட்டி உள்ளது. தொடர் சிகிச்சையின் மூலம் நோவா முழுமையான மூளை வளர்ச்சியை பெற்று சராசரி மனிதர்கள் போல நீண்டகாலத்துக்கு உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து