Idhayam Matrimony

பேட்ஸ்மேன் ஆக அதிக அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளேன் - ஷ்ரேயாஸ் அய்யர் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இரண்டு சதங்கள் விளாசிய ஷ்ரேயாஸ் அய்யர், இந்திய அணிக்கான அறிமுக ஆட்டங்களை மறக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம்...

இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். 25 வயதாகும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய தேசிய அணியில் இடம்பிடித்தார். இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆன இவர், முதல் போட்டியில் 9 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் 88 மற்றும் 65 ரன்கள் சேர்த்து அசத்தினார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இரண்டு போட்டியில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

2 சதங்கள்...

இதனால் தேசிய அணியில் நிரந்தரமாக விளையாட முடியவில்லை. இந்தியா ‘ஏ’ அணிக்கு திரும்பிய ஷ்ரேயாஸ் அய்யர், தனது ஆட்டத்தில் மெருகேற்றினார். தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அசத்தியுள்ளார். வரும் காலங்களில் தேசிய அணிக்கான தேர்வுக்குழு இவரது பெயரை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப கால ஆட்டத்தை மறக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம்...

இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘அது அனைத்தும் முடிந்த கதை. அறிமுகமான காலத்தை மறந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். முதிர்ச்சியடையும்போது, தானகவே பொறுப்புகளை எடுத்துக்கொள்ள தொடங்கி விடுவோம். கேப்டனாக இருக்கும்போது மற்ற வீரர்கள் உங்களை பார்க்க தொடங்குவார்கள். அவர்கள் மரியாதை கொடுப்பார்கள். பேட்ஸ்மேன் ஆக நான் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். என்னுடைய பலவீனம் மற்றும் பலத்தை ஆராய்ந்து தெரிந்து கொண்டேன். நான் விளையாடும்போது முடிந்த அளவிற்கு கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். கேப்டனாக இருக்கும்போது பல விஷயங்கள் உதவி புரிகின்றன’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து