முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறிசேனாவை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் விடுவிப்பு

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட, இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் மார்சலி தாமஸ். இலங்கை அதிபர் சிரிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்சே ஆகியோரை கொல்ல திட்டமிட்டதாக, மார்சலி தாமஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் உளவாளி நமல் குமாரா என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இலங்கை போலீசார் மார்சலி தாமசை கைது செய்து விசாரித்தனர். இந்த வழக்கின் முழு ஆதாரங்களை சமர்பிக்குமாறு, கொழும்பு மாஜிஸ்திரேட் ரங்க திசநாயகே, சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, இரு வாரம் கெடு அளிக்கப்பட்ட நிலையில் போலீசார், சதி திட்டம் தொடர்பாக. எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்ட தாமஸ், நான் நிரபராதி. என்னை யாரோ சதித்திட்டம் தீட்டி வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என கோர்ட்டில் முறையிட்டார். இதையடுத்து, எந்த ஆதாரமும் இல்லாமல், ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என கூறி தாமசை விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஆனால், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததாக, தாமஸ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து