முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ நடவடிக்கையை கைவிடுங்கள் - இந்தியா, பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை கைவிடும்படி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து, புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமை அழித்ததால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதே நிலை நீடித்தால் போர் மூளும் அபாயம் ஏற்படும்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழல் கவலை அளிப்பதாகவும், இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர் ஜோசப் வோட்டல் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி (பொறுப்பு) பேட்ரின் ஷானகான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

பதற்றத்தை தணிப்பதில் மந்திரி ஷானகான் கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகளும் மேற்கொண்டு ராணுவ நடவடிக்கை தவிர்க்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து