முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாக். போட்டி திட்டமிட்டபடி நடக்கும் - ஐ.சி.சி. சூசகம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என ஐ.சி.சி. உறுதியளித்துள்ளது.

தாக்குதல்...

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி (பிப்.14) தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து, நேற்று முன்தினம் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்கு நுழைந்து தாக்குதல் நடத்த முயறித்தன. உடனே இந்திய ராணுவத்தால் அவை விரட்டி அடிக்கப்பட்டன. அத்துடன், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

வீரர்கள் கருத்து...

இந்த நிகழ்வின்போது இந்திய விமானி அபிநந்தன் திரும்பவில்லை. பின்னர், பாகிஸ்தான் ராணுவத்திடம் அவர் இருப்பதாக தகவல் தெரிய வந்தது. இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் இருக்கும் நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என முன்னாள் வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் கூறினர். ஆனால், சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஐ.சி.சி. சூசகம்...

இந்நிலையில், ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் குழு கூட்டம் துபாயில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டும் என ஐசிசி உறுதியளித்தது.இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐசிசி சூசகமாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து