முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் மகனின் குடியுரிமை ரத்து: சவுதி அரசு திடீர் முடிவு

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

சவுதி : அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனின் குடியுரிமையைப் பறித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹம்சா பின்லேடன் குடியுரிமையை திடீரென ரத்து செய்வதற்கான காரணத்தை சவுதி அரேபிய அரசு தெரிவிக்கவில்லை.

கடந்த 1994-ம் ஆண்டு சூடானில் ஒசாமா பின்லேடன் அடைக்கலமாக இருந் தபோது, அவரின் குடியுரிமையை சவுதி அரேபிய அரசு பறித்தது. அப்போது, ஹம்சா பின்லேடன் சிறு குழந்தையாக இருந்தார். ஆனால், தனது தந்தையின் மறைவுக்குப் பின், அவர் சவுதி அரேபியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், கடந்த நவம்பர் மாதமே ஹம்சா பின்லேடனின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாக சவுதி அரேபிய அரசு கூறி வந்தாலும், அதிகாரபூர்வமாக அறிவித்து, அரசாணை தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அறிவோருக்கு ரூ.7 கோடி பரிசை அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து