முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானி அபிநந்தன் விடுவிப்பு அமெரிக்கா, சீனா வரவேற்பு

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்திய வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்ததற்கு அமெரிக்கா, சீனா வரவேற்றுள்ளன.

கடந்த 27-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

இந்திய விமானியை விடுவித்த பாகிஸ்தானின் முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார். 

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில், பாகிஸ்தான் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கையை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து