முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதட்டம் காரணமாக அமிர்தசரஸில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த பாக். பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீசார்

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கராச்சி : எல்லை பதட்டம் காரணமாக அமிர்தசரஸ் அருகே நிறுத்தப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பாகிஸ்தான் பயணிகளுக்கு இந்திய போலீசார் உணவு வழங்கி உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவியது. 

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இதனால் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயில் லாகூர் வரை வந்தது. அந்த ரயிலில் இந்தியாவுக்கு பயணம் செய்த 16 பாகிஸ்தான் பயணிகள் இருந்தனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் நடுவழியில் தவித்த பயணிகள் அமிர்தசரஸ் அருகே உள்ள அட்டாரி ரயில் நிலையத்துக்கு வெளியே ஆதரவற்ற நிலையில் தவித்தபடி நின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற இந்திய போலீசார் அவர்களுக்கு உணவு அளித்து உபசரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து