முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8- ம் தேதி நடந்த அதிபர் தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். அது அமெரிக்க தேர்தலின் போது பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், தன்னுடன் டிரம்ப் பல முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார் என்றும், இதுகுறித்து வெளியே சொன்னால் அது அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக திரும்பும் என்பதால், தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.92 லட்சம்) பணம் தந்தார் என்றும் கூறி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்து அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழு விசாரணை நடத்தி வந்தது. அப்போது டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன், ஆமாம், உண்மைதான், ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் தரப்பட்டது என ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்திய போதும், மைக்கேல் கோஹன் அதே கருத்தை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இவை அனைத்தையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

இதற்கிடையே பணம் வாங்கிக் கொண்டு, டிரம்ப் செக்ஸ் உறவு விவகாரத்தை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக அவருடன் போட்ட ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய கோர்ட்டில் ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கு தொடுத்தார்.

அந்த ஒப்பந்தத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் சார்பில் அவரும், டிரம்ப் சார்பில் அவரது வக்கீல் மைக்கேல் கோஹனும் கையெழுத்து போட்டிருந்தனர். ஆனால் ஒப்பந்தத்தில் தானும், சம்பந்தப்பட்ட டிரம்பும்தான் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அவர் கையெழுத்து போடாத நிலையில், அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ஆட்டீரோ தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து