முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கு: டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 47 மாதம் சிறை

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : மோசடி வழக்கில் டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் பிரசார குழு மேலாளர் பால் மானபோர்ட். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறவும், ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷ்யா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது. இதையொட்டி ராபர்ட் முல்லர் குழு சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பால் மானபோர்ட் மீது அலெக்சாண்டிரியா நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அவரது தண்டனை விவரம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து அவர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து