முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புது வியாபாரம், புது கெட்அப்: லண்டனில் சொகுசாக வலம் வரும் நீரவ் மோடி

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடி தற்போது லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தப்பி ஓடிய நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், லண்டனின் மேற்கு கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நீரவ் மோடி சொகுசாக வாழ்ந்து வருவதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 3 படுக்கையறை கொண்ட வீட்டில் நீரவ் மோடி தங்கியிருப்பதாகவும், அங்கிருந்து புதிதாக வைர விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதுதவிர நீரவ் மோடியிடம் செய்தியாளர்கள் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து