முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகள் இருப்பதை வேட்பு மனுவில் மறைத்தாராம்! இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய கோரும் மனு மீது இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத் : இம்ரான் கானை பதவி நீக்கம் செய்யக்கோரும் மனுவை லாகூர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்ததற்காக பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரும் மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் இன்று 11-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த அனாலூய்சா ஒயிட் என்பவரது மகள் டிரியன் ஒயிட், இம்ரான் கானுக்குப் பிறந்தவர் என்று பரவலாக பேசப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் மக்களவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இம்ரான் கான், தனது வேட்புமனுவில் டிரியன் ஒயிட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், தனக்கு பிரிட்டனில் ஒரு மகள் இருப்பதை வேட்பு மனுவில் மறைத்ததன் மூலம், பிரதமர் இம்ரான் கான் அரசியல் சாசனத்தை மீறி விட்டதாகக் கூறி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுவில் உண்மையை மறைத்துள்ளதன் மூலம், அரசியல் சாசன சட்டப்பிரிவை மீறியுள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்த மனுவை, லாகூர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது. இந்த தகவல்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இதே போன்ற மனுவை, அந்த நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து