முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: புதிய நிபந்தனை விதிக்கிறார் அதிபர் டிரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் என டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி தந்தது.

ஆனாலும், அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி 1-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு, அமெரிக்கா மற்றும் சீன வர்த்தக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வாஷிங்டனில் டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். ஆனால், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் என திட்டவட்டமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து