முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

இன்டியன்வெல்ஸ் : இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அஸரென்காவுக்கு எதிராக 22-வது முறையாக மோதிய செரீனா அதில் ருசித்த 18-வது வெற்றி இதுவாகும். செரீனா 3-வது சுற்றில் மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜாவுடன் (ஸ்பெயின்) மோத வேண்டி உள்ளது. 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் பார்போரா ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) விரட்டினார். ஸ்விடோலினா (உக்ரைன்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தகுதி நிலை வீரர் இங்கிலாந்தின் டேனியல் இவான்சை எதிர்கொண்டார். இதில் வாவ்ரிங்கா 6-7(4), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி கண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து