வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கில் இந்தோனேசிய பெண் விடுவிப்பு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
Indonesian woma 2019 03 11

கோலாலம்பூர், வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பெண்ணை, மலேசிய நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம். கடந்த 2017-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட வி எக்ஸ் என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயுஷா, வியட்நாமைச் சேர்ந்த தோன் தி ஹுவாங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தோனேசிய பெண் சித்தி ஆயுஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்காக காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து சித்தி ஆயுஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து