எத்தியோப்பியா விபத்து எதிரொலி: போயிங் ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
China-Boeing flight 2019 03 11

பீஜிங், எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 விமானம், நேற்று முன்தினம் காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்ற போது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தக ரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும் படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தியோப்பிய விபத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பிறகே விமான சேவை தொடங்கும் என சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து