முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் ஆர்வத்துடன் சென்று வாக்களித்த மக்கள்

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பியாங்காங், வடகொரிய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வடகொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் வம்சத்தினர்தான் அந்நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருப்பது கட்டாயமாகும். அரசையும், ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பார். அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. தலைவரால் வரைவு செய்யப்படும் சட்டங்களுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் வழங்குவது மட்டுமே அதன் ஒரே பணி.

வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் அங்கு தேர்தல் நடைபெற்றது. கிம் ஜாங் அன், பியாங்காங் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார். அதே போல் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிகளில் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வடகொரியாவில் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். 17 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதத்தை ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு இருக்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். மக்கள் தங்களது வேட்பாளரை புறக்கணிப்பது என்பது அரிதிலும் அரிதாக பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும் ஒரு சிலரை கூட பைத்தியக்காரர்கள் என போலீசார் அறிவித்து விடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து