முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தை சுட்டதாக இந்தியா பொய் சொல்கிறதாம்: பாகிஸ்தான் புலம்பல்

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை இந்தியா சுட்டதாக கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. அரசியல் ஆதாயத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. அப்போது நடந்த சண்டையில், இந்தியாவின் மிக்-21 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே போல பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இத்தகவலை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. எப்-16 விமானத்தை பயன்படுத்தவே இல்லை என கூறும் அவர்கள், இந்தியாவின் 2 போர் விமானங்களை தகர்த்ததாகவும் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்தியா ஒரு விமானத்தை மட்டுமே இழந்தது. 2 விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது என்றால் சர்வதேச அரங்கில் ஏன் அந்த வீடியோவை வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தோல்வியால் ஏற்பட்ட தர்மசங்கடத்தை மூடிமறைக்கவும், உள்நாட்டு அரசியல் ஆதாயத்திற்காகவும் இந்திய அரசும், அந்நாட்டு மீடியாக்களும் பொய் தகவல்களை பரப்பி, இந்தியர்களையும், சர்வதேச நாடுகளையும் தவறாக வழிநடத்துகின்றன. பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்திய விமானம் சுட்டு வீழ்த்தியதாக கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. தன்நாட்டு மக்களை திருப்திபடுத்த வேண்டுமென்பதற்காக இந்திய அரசு அடுத்தடுத்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலிருந்து வெகு தொலைவில்தான் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு தந்துள்ள ஆதாரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து