சென்னையில் 14-ம் தேதி ஆர்யா-சாயிஷா பிரமாண்ட திருமண வரவேற்பு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      சினிமா
Ariya 2019 03 11

Source: provided

சென்னை : ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும்  திருமணம் நடந்து முடிந்த நிலையில், வருகிற 14-ந் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.  

‘அறிந்தும் அறியாமலும்‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ட்விட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். கடந்த 9-ந் தேதி மாலை ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் ஆர்யா - சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

ஆர்யா-சாயிஷா திருமணம்  இஸ்லாமிய முறைப்படி நடந்தது. திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம், ராணா தயாரிப்பாளர்கள் ராஜசேகர பாண்டியன், ஞானவேல் ராஜா, தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வருகிற 14-ந் தேதி சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து