முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை ராகுல் காந்தி நாகர்கோவில் வருகை

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

நெல்லை, பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட பிரசாரத்திற்காக நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவில் வருகிறார். இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தொடங்கி விட்டது. வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்திலும் ராகுல் காந்தியின் பிரசாரம் நாளை 13-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் அழகிரி ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து ஸ்காட் கல்லூரி மைதானத்தை ராகுல் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். அவர்கள் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். நாகர்கோவில் ஆயுத படை மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து பொது கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அவர் கார் மூலம் செல்கிறார்.விழா முடிந்து அவர் திரும்பும் வரை போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ராகுலின் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து