கன்னட நடிகரைத் தாக்கியதாக புகார்: நடிகர் விமல் மீது வழக்கு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      சினிமா
Actor Vimal 2019 03 11

சென்னை, கன்னட நடிகரைத் தாக்கியதாக நடிகர் விமல் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்கியதாக புகார்

சென்னை, விருகம்பாக்கத்தில் தன் நண்பர்களுடன் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது, அதேவிடுதியில் கன்னட நடிகர் ஒருவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏதோ விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விமல் உட்பட அவரது நண்பர்கள் சேர்ந்து கன்னட நடிகரைத் தாக்கியதாக புகார் எழுந்தது.

விமல் தரப்பிலும்...

இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் போலீஸார் நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விடுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. அந்த அடிப்படையில் 294-பி என்ற சட்டப்பிரிவின் கீழ் விமல் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமல் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து