ஆஸிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: மோசமான பீல்டிங்கால் தோல்வி: கோலி

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      விளையாட்டு
Virat kohli 2019 03 11

Source: provided

மொகாலி : மோசமான பீல்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா பேட்டிங்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் 358 ரன் குவித்தும் இந்தியா தோல்வி அடைந்தது. மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. தொடக்க வீரர் தவான் சதம் அடித்தார். 115 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் 143 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2015-ல் மெல்போர்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 137 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

எளிதான வெற்றி

மற்றொரு தொடக்க வீரர் ரோகித்சர்மா 92 பந்தில் 95 ரன் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய அணி 359 ரன் இலக்கை எளிதில் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆஸ்டன் டர்னரின் அதிரடியால் அந்த அணிக்கு எளிதான வெற்றி கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம் சதம் அடித்தார். அவர் 105 பந்தில் 117 ரன்னும் (8பவுண்டரி, 3 சிக்சர்) தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 99 பந்தில் 91 ரன்னும் (7 பவுண்டரி) டர்னர் 43 பந்தில் 84 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பீல்டிங் மோசம்...

இந்தியாவின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. பல கேட்சுகளை தவற விட்டனர். டர்னரை விக்கெட் கீப்பர் ரிசப்பண்ட், ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை தவற விட்டார். இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாங்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பனி பொழிவு முக்கிய பங்கு வகித்தது. பனி பொழிவு குறித்து 2-வது முறையாக தவறாக கணித்து விட்டோம். இதனால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. பனி பொழிவு பந்து வீச்சை சேதப்படுத்தி விட்டது.

சிறப்பான ஆட்டம்...

டர்னர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின போக்கை மாற்றிவிட்டார். இதே போல ஹேண்ட்ஸ் ஹோம், உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு அந்த அணி தகுதியானது. அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாதனையான இந்த சேசிங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இன்னும் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம். நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் டி.ஆர்.எஸ். பற்றி விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி முலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து