முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டியா தொகுதியில் காங்., வேட்பாளராக சுமலதா போட்டியிடமாட்டார் - சித்தராமையா

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை சுமலதா போட்டியிடமாட்டார் என்று சித்தராமையா கூறியுள்ளார்.  

மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான அம்பரீஷ் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். அந்த தொகுதியில் போட்டியிட அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்காக காங்கிரசிடம் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் மாண்டியா தொகுதி ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா அறிவித்தார்.

இந்த நிலையில் டெல்லிக்கு வருகை தந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல விவகாரங்கள் டெல்லியில் நடைபெறும் தேர்தல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்படும். காங்கிரஸ் எம்.பி.க்கள் வகிக்கும் தொகுதிகளை ஜே.டி.எஸ்.வுக்கு விட்டுக் கொடுப்பது குறித்து முடிவாகவில்லை. ஜே.டி.எஸ்.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை நான் கூற முடியாது. மைசூரு தொகுதியை ஜே.டி.எஸ்.வுக்கு விட்டுக் கொடுப்பது குறித்து தனது கருத்தை கூட்டத்தில் தெரிவிப்பேன். மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடமாட்டார். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து