பார்லி. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த அ.தி.மு.கவினரிடம் 2-வது நாளாக ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நேர்காணல்

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      தமிழகம்
CM Edappadi-OPS 2019 02 02

சென்னை : அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்றத் தேர்தல் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று இரண்டாவது நேர்காணல் நடத்தினர்.

20 தொகுதிகளில்...

அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை நேர்காணல் நடந்தது. மாலை வரை நடைபெற்ற இந்த நேர்காணலில் சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களும் தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 20 தொகுதிகளின் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். குறிப்பாக கரூர் தொகுதி எம்.பியும், பாராளுமன்ற துணைசபாநாயகருமான தம்பித்துரை, சேலம் எம்.பி.பன்னீர்செல்வம், திருப்பூர் எம்.பி. சத்யபாமா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ரவிந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெயவர்தன் எம்.பி...

இந்த நிலையில் 2-ம் கட்ட நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த எம்.பிக்கள், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர். விஜயகுமார், ஜெயவர்தன் ஆகியோரும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாலமுருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு நடைபெற்ற நேர்காணலில் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி. ஆதிராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று திருவள்ளூர், காஞ்சிபுரம் (தனி) அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலை முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. பாராளுமன்றக்குழுத்தலைவர் வேணுகோபால் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி ஆகியோர் நடத்தினர். நேற்று வடமாவட்டங்கள் உள்ளிட்ட 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

விருப்பமனுக்கள்...

இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்பமனு பெறும் பணி இன்று காலை தொடங்குகிறது. இன்று ஒரே நாளில் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்பமனு வழங்கலாம். திருவாரூருக்கு ஏற்கனவே பெறப்பட்டு விட்டதால் அதற்கான விருப்பமனுக்கள் வழங்கத்தேவையில்லை என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து