பார்லி. தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு ஊக்கம் கொடுங்கள் - பிரபலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
pm modi 2019 03 03

புது டெல்லி : நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்படி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளதையடுத்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் உலக சாதனை படைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். வாக்குப்பதிவை அதிகரிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளின் முக்கிய பிரபலங்களின் டுவிட்டரை டேக் செய்த மோடி, வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறியிருந்தார். பிரதமரின் வேண்டுகோளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுக் கொண்டு, டுவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து