முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பாதர்வா : ஜம்மு காஷ்மீரில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பாத்ரி சந்தைப்பகுதியில் நேற்று  அதிகாலை 4.15 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பெரும் சத்தம் கேட்டு நிலநடுக்கம் என எண்ணி வீட்டின் வெளியே வந்து பார்த்த போது நிலச்சரிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என பாதர்வா எஸ்.பி. ராஜ் சிங் கவுரியா தெரிவித்துள்ளார். மேலும் 14 கட்டிடங்கள் உட்பட 30 கடைகள் நிலச்சரிவில் புதைந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து