பொள்ளாச்சி அருகே சோகம் வாய்க்காலில் தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
car-accident-Pollachi 2019 03 13

பொள்ளாச்சி, பொள்ளாச்சி அருகே கார் வாய்க்காலில் பாய்ந்து 8 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கோவை மசக்காளிப்பாளையம் உப்பிலி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கேபிள் ஆபரேட்டர். இவரது மனைவி சித்ரா, மகள் பூஜா (8). பிரகாஷ் தனது மனைவி, மகள், அக்காள் சுமதி, அண்ணன் பன்னீர் செல்வம் மனைவி லதா, அவரது மகள் தாரணி (10), கவியரசு (9), நந்தனா (3) ஆகியோருடன் காரில் பழனி கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். நேற்று இன்று அதிகாலை ஒரு மணியளவில் பழனி - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிமேடு என்ற பகுதியில் கார் வந்து கொண்டு இருந்த போது அங்கு பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள குறுகிய பாலத்தை காரை ஓட்டிய பிரகாஷ் கவனிக்கவில்லை. கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி வாய்க்காலில் தலைகுப்புற பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் கார் தண்ணீரில் மூழ்கியது.

இந்த விபத்தில் பிரகாஷ், மனைவி சித்ரா, மகள் பூஜா, அக்காள் சுமதி, தாரணி, லதா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் கார் வாய்க்காலுக்குள் பாய்ந்து 8 பேர் பலியானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோமங்கலம் போலீசுக்கும், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தான் காரை மீட்டு  8 பேரது உடல்களையும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ் தனது குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் முன் கோவையில் உள்ள உறவினர்களிடம் செல்போனில் பேசி உள்ளார். அவரது குடும்பத்தினரும் நள்ளிரவு 11.30 மணி வரை உறவினர்களிடம் பேசி வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது தான் கார் வாய்க்காலில் பாய்ந்து 8 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து