சிவகங்கையிலும் தேர்தலை தள்ளி வைக்க அனைத்துக் கட்சி கோரிக்கை

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
Parliment 2019 02 15

சிவகங்கை, சிவகங்கையில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தனசேகரன் (பா.ஜ.க), பெரேஸ்காந்தி (தேசியவாத காங்.) ஆகியோர், மதுரையை போல மானாமதுரையிலும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதே போல் திருப்புவனம், நாட்டரசன்கோட்டை பகுதிகளிலும் விழாக்கள் நடைபெறும். ஏப்ரல் 18-ல் தேர்தல் நடந்தால் பொதுமக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும். இளையான்குடி பகுதியில் 43 கிராம மக்கள் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க மதுரை சென்று விடுவர். இதனால் அவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லாமல் போய் விடும். ஆகவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளதித்த கலெக்டர், சித்திரைத் திருவிழா குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். பட்டியல் கொடுத்தால் இறந்தோர் பெயர், இரட்டை பதிவு உடனடியாக நீக்கப்படும். பதட்டமான வாக்குச்சாவடி விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து