முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்: கெஜ்ரிவால்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, காங்கிரசுடன் கூட்டணி இல்லாமலேயே மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் கூறியதாவது:-

காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்கவில்லை. கூட்டணி சேர நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், காங்கிரஸ் அதற்கு முன்வரவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமலேயே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இது ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

வரும் தேர்தலில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எங்களின் முக்கிய பிரச்சாரமாக இருக்கும். இதுவரை மக்களவைத் தேர்தலில் டெல்லி வாக்காளர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர். ஆனால், இந்த முறை டெல்லிக்கு மாநில அந்தஸ்துக்காக ஓட்டளிக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து