நடப்பது 2-வது சுதந்திரப் போராட்டம் பார்லி. தேர்தல் பற்றி பிரியங்கா கருத்து

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
Priyanka 2019 03 13

காந்திநகர், நடப்பது 2-வது சுதந்திர போராட்டம் என்று பாராளுமன்ற தேர்தல் குறித்து பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா, அதன்பின் காந்திநகர் மாவட்டம், அடாலஜ்ஜில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அந்த 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே? ரூ.15 லட்சம் பணம் எங்கே?அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தால் நமது நாடு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் இன்றைய நிலைமை வேதனையளிக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க நாடு முழுவதும் வெறுப்புணர்வை விதைக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள். யார் நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவார்கள். விவசாயிகளின் நலனுக்காக யார் உழைப்பார்கள். பெண்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள். இதுதொடர்பாக கேள்வி எழுப்புங்கள். சரியான முடிவு எடுங்கள். வாக்குதான் உங்கள் ஆயுதம். உங்களால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.

இவ்வாறு அவர் பேசினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து