அபிநந்தனின் பட போஸ்டரை பேஸ்புக்கில் பகிர்ந்த டெல்லி பா.ஜ.க. எம்.எல்.ஏவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
MLA notice 2019 03 13

புது டெல்லி : இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படம் இடம் பெற்ற போஸ்டரை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி துவங்கி 7 கட்டங்களாக மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு விதித்துள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா அனுப்பியிருந்த கடிதத்தில் ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தார். 

இந்த உத்தரவை மீறி டெல்லி பா.ஜ.க. எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மா தனது பேஸ்புக் பக்கத்தில், மோடி , அபிநந்தன் வர்த்தமான் ஆகியோர் இடம் பெற்ற இரண்டு புகைப்படங்களை நீக்காமல் இருந்தார். இதைக் கவனித்த தேர்தல் கமிஷன், அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கே.எம் மகேஷ், விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மாவின் செயல் தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். தனது செயல் குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து