அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் இன்று அரோரா ஆலோசனை

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
Sunil Arora 27-11-2018

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க., பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து