காங். தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது: புதிய வீடியோவை வெளியிட்டது பா.ஜ.க.

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
Ravi Shankar Prasad 2018 12 29

புது டெல்லி : காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது புதிய வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை மசூத் அசார்ஜி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாகவும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதை ஹபீஸ்ஜி என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாகவும் இரு கட்சிகளும் மாறி, மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இதற்கு பா.ஜ.க.தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஹபீஸ் சயீதின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அறிவுடன் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானை குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பா.ஜ.க.விடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். முதலில் உங்களை பாருங்கள். காஷ்மீரில் பா.ஜ.க. என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள் என்று ஹபீஸ் சயீது பேசியுள்ளார். இந்த வீடியோவை குறிப்பிட்டுத்தான் ரவிசங்கர் பிரசாத் பேசியதாகவும், ஹபீஸ் சயீதுடனான காங்கிரசின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து