பயங்கரவாதிகளால் காஷ்மீரில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 13 மார்ச் 2019      இந்தியா
kashmir indian army 2018 10 19

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீவிர தேடுதல் வேட்டை

காஷ்மீர் மாநிலம் தெற்கில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லீனா கிராமத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் நாயக். இவரது மகன் ஆஷிக் உசைன். ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் ஆஷிக் உசைனை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தகவலறிந்து ராணுவமும், மாநில போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷிக் உசைன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து