இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பல மணி நேரம் முடங்கிய பேஸ்புக் செயலி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      உலகம்
Facebook 2018 01 18

சான் பிரான்ஸிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக் செயலி முடங்கியதாக பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்ஸ்டகிராம் ஆகிய அப்ளிகேஷன்கள் முடங்கியதால், பயனாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 2 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக், உலகம் முழுவதிலும் பல இடங்களில் முடங்கியது. இதனால், அவதி அடைந்த பயனாளர்கள் டுவிட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் முடங்கியதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், பேஸ்புக் மற்றும் அதனுடைய இணை அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதில், சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியதை நாங்கள் அறிந்துள்ளோம். இப்பிரச்சினையை கூடுமானவரையில் விரைவாக சரி செய்கிறோம் என தெரிவித்து இருந்தது. சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என்றும் பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து