18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      அரசியல்
Kamal Hassan 2019 02 06

சென்னை, தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக நடிகர் கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என அவர் நேற்று அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கமலின் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஏற்கனவே ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து