உத்தரபிரதேசத்தில் 15 நிமிடம் காத்திருந்து பீம் ஆர்மி தலைவரை சந்தித்த பிரியங்கா

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
priyanka-bhim 2019 03 14

மீரட் : உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ தலைவர் சந்திரசேகர் அசாத்தை 15 நிமிடங்கள் காத்திருந்து பிரியங்கா நலம் விசாரித்துள்ளார்.   

உத்தரபிரதேசத்தில் பீம் ஆர்மி எனும் அமைப்பு தலித் மக்களுக்காக பணியாற்ற ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்(30) ஆவார். வழக்கறிஞரான இவர் கடந்த செவ்வாயன்று அரசின் அனுமதியின்றி தேர்தலுக்காக மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முற்பட்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சந்திரசேகர ஆசாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்  திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவரை மருத்துவமனையில் சந்தித்தார். முன்னதாக சந்திரசேகர் ஆசாத்தை காண பிரியங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 15 நிமிட வாக்குவாதத்திற்கு பின்னர் பிரியங்கா, அசாத்தை காண அனுமதிக்கப்பட்டார். 
 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து