பார்லி. தேர்தல்: மே.வங்கத்தில் திரை பிரபலங்களை நிறுத்த மம்தா முடிவு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      அரசியல்
Mamta 29-10-2018

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மக்களவை தேர்தலுக்கு 5 திரை பிரபலங்களை நிறுத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் பிரபல வங்காள திரைப்பட நடிகை மிமி சக்ரபோர்த்தியை நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசீர்ஹாட் தொகுதியில் திரைப்பட நடிகை நஸ்ரத் ஜஹான் போட்டியிடுகிறார்.  இவர்களை தவிர்த்து, நடிகர்கள் மற்றும் எம்.பி.க்களாக இருக்கும் தீபக் அதிகாரி, சதாப்தி ராய் மற்றும் மூன்மூன் சென் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதில் தீபக் மற்றும் ராய் முறையே கடால் மற்றும் பீர்பும் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர். பங்குரா தொகுதிக்கு பதிலாக அசன்சோல் தொகுதியில் சென் போட்டியிடுகிறார். மேற்கு வங்காளத்தில் கடந்த காலங்களில் பா.ஜ.க.வும் திரை பிரபலங்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது. திரைப்பட நடிகர் மற்றும் பின்னணி பாடகரான பாபுல் சுப்ரியோ மற்றும் மகாபாரத சீரியலில் திரவுபதியாக நடித்த ரூபா கங்குலி ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து