பொள்ளாச்சி சம்பவம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தமிழகம்
madras-high-court 2017 7 17

சென்னை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னை ஐகோர்ட்டில் பெண் வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். ஐகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறி கோரிக்கையை நிராகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து