மோடி ஆதரவாளர்கள் குறித்து நடிகை ரம்யா சர்ச்சை கருத்து

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
Actress Ramya 2019 03 14

புது டெல்லி, பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் முட்டாள்கள் என காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பாந்தனா, டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் சமூக வலைதள மற்றும் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் திவ்யா ஸ்பாந்தனா உள்ளார். நடிகை குத்து ரம்யாதான் இந்த திவ்யா ஸ்பாந்தனா என்பது கூடுதல் தகவல். இவர் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்களுக்கு தெரியுமா? மோடி ஆதரவாளர்களில் 3-ல் ஒருவர் மற்ற இருவரை விடவும் அதிக முட்டாளாக இருப்பார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்பது என் கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

இவரை விமர்சித்து டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் ஒருவர், ராகுல் ஆதரவாளர்கள் 3 பேரில் அனைவருமே ராகுலை போன்று முட்டாள்கள் என உங்களுக்கு தெரியுமா என பதில் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமரின் போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தை பதிவிட்டு, திருடன் என குறிப்பிட்டதற்காக ஸ்பாந்தனா மீது ஏற்கனவே அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து