பொள்ளாச்சி அருகே விபத்தில் 8 பேர் பலி: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தமிழகம்
CM Edappadi-OPS 2019 02 02

சென்னை : பொள்ளாச்சி அருகே வாய்க்¬காலில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அவைத் தலைவரின்...

கோவை மாநகர் மாவட்டம், சவுரிபாளையம் பகுதி கழக துணைச் செயலாளரும், 57வது வட்ட கழக அவைத் தலைவருமான ஆர்.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஆர்.பிரகாஷ் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது, பொள்ளாச்சி அருகே கெடிமேடு கால்வாயில், இவர்கள் பயணித்த கார் கவிழ்ந்ததில், பிரகாஷ், அவரது மனைவி சித்ரா, பன்னீர்செல்வத்தின் மனைவி லதா மற்றும் இவர்களது பிள்ளைகள், சகோதரி உள்ளிட்ட 8 பேர் அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தோம்.

எச்சரிக்கையுடன்...

கழக உடன்பிறப்புகள் வாகனங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அம்மா அறிவுறுத்தியதை போல நாங்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த போதிலும், இதுபோன்று எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று, கழக உடன்பிறப்புகள் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் எங்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகின்றன.

குடும்பத்தினரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து