மீனாட்சி கோவிலுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுவதாக புகார் நடவடிக்கை எடுக்க சிவனடியார்கள் கோரிக்கை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      மதுரை
14 meenachi

 மதுரை, - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சிவனடியார்கள் திருகூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அர்ஜூணன், செயலாளர் குமரகுரு, பொருளாளர் சரவணன் மற்றும் செய்தி தொடர்பாளர் ராஜபாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். உள்ளூர்,  வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கோவில் வசந்தராயர் மண்டபத்தில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அது மட்டுமல்லாது, கோவிலில் உள்ள கடைகளும் தீயில் கருகி சாம்பலாயின. இதையடுத்து கோவிலில் இருக்கும் கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டது. மேலும் கடந்த ஆண்டு கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லவும் கோர்ட் தடை விதித்தது.
இந்த நிலையில் அணையா விளக்கில் பக்தர்கள் நெய், எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் முக்கிய விழா காலம் என்பதால் தடை செய்யப்பட்ட பொருட்களை சிலர் மறைமுகமாக கோவிலுக்கு எடுத்து வந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கோவில் நிர்வாகமும், காவல் துறையினரும் தலையிட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து