தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை தொகுதியில் 7 இடங்களில் வாகன சோதனை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      திண்டுக்கல்
14 election

 நிலக்கோட்டை - வருகிற திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் வருகின்ற மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும் , சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.. தேர்தல் நடைபெறுவதால் நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை தேர்தல் பணிக்காக பல்வேறு நிலையில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக அதிகாரிகளுக்கு முதல்கட்ட பணி செய்தல் குறித்து விளக்கக் கூட்டம் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் .நிலக்கோட்டை தாசில்தார்மான நவநீத கிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது, கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: தற்போது நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை இடைத்தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக இணைந்து வருகிறது. இதனால் பல்வேறு நிலையிலிருந்து அனைத்து கட்சிகளும் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை  அதிகளவு நிலக்கோட்டை தொகுதியை நோக்கி படை எடுக்க வாய்ப்பு இருக்கிறத இதற்காக இதற்காக மாவட்ட ஆட்சியர் நிலக்கோட்டை  தொகுதியை பொருத்த அளவுக்கு 18 சாவடிகளை பதட்டமான வாக்குச்சாவடிகளை அறிவித்து அதற்குரிய தகுந்த போலீஸ் பாதுகாப்பும் மற்ற நடவடிக்கையும் எடுக்க தேர்தல் ஆணையம் உரிய ஆலோசனை வழங்கியுள்ளது. அதைப் போன்றே நிலக்கோட்டை தொகுதியை பொருத்த அளவுக்கு 7:இடங்களில் வாகன சோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.. இடங்களான பள்ளபட்டி பிரிவு, அணைப்பட்டி, வெங்காடம்பட்டி பிரிவு, கட்டக்காமன்பட்டி- மின்சார வாரியம் அலுவலகம் அருகே, காமு,பிள்ளை சத்திரம் பிரிவு, கொடைரோடு டோல்கேட், வத்தலகுண்டு ஆ  பிரிவு, நிலக்கோட்டை டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ளிட்ட 7 இடங்களில் 24 மணி நேரமும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.  இது மட்டுமல்லாமல் நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை 3 பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளார்கள். நிலக்கோட்டை தொகுதியில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் ஏதேனும் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு துறை ரீதியான தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக கண்டறியப்பட்டால் உடனே தகவல் கொடுக்கவும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் ராமசாமி மண்டல துணை தாசில்தார் ருக்மணி, தேர்தல் நடத்தும் துணை தாசில்தார் டேனியல் மற்றும் நிலக்கோட்டை தொகுதியிலுள்ள பேரூராட்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்  போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.. படவிளக்கம் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் ஆய்வுகூட்டம் நடந்தபோது எடுத்த படம்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து