முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பெயர் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கோபன்ஹேகன், நார்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலை தடுக்க வேண்டி, சுவீடனின் பாராளுமன்ற வாசலில், சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். மேலும் உலக தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை புறக்கணிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து கிரேட்டா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாடினார். அவரது பேச்சு உலகின் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக விளங்கியது. இது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளி அன்றும் பள்ளிக்கு செல்வதை விடுத்து, பாராளுமன்ற வாசலில் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தபெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கிரேட்டா கூறுகையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதை மிகுந்த கவுரவமாகவும், ஆசியாகவும் கருதுகிறேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து