2014 பார்லி. தேர்தலில் நோட்டாவை பயன்படுத்தியோர் 60 லட்சம் பேர்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      இந்தியா
parliament 2018 10 14

புது டெல்லி, தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால், முன் 49ஓ என்ற சட்டப் பிரிவின்படி, தேர்தல் அதிகாரியிடம் கூறி, அதற்கான பதிவேட்டில் குறிப்பிடலாம். ஆனால், இதில், வாக்காளரின் விபரங்கள் தெரிய வரும். அதனால், வாக்காளரின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டதே நோட்டா.

சுப்ரீம் கோர்ட் கடந்த 2013-ல் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்திலும், நோட்டா இடம்பெற்றுள்ளது. இயந்திரத்தின் கடைசி வரிசையில், இதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த நோட்டா, முதல் முறையாக, 2013-ல், ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது, 15 லட்சம் பேர் இதை பயன்படுத்தினர். ஆனால் மொத்த வாக்காளர்களில் நோட்டாவின் எண்ணிக்கை 1.5 சதவீதமாகவே இருந்தது.

கடந்த 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 60 லட்சம் பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளனர். ஆனாலும், நோட்டாவால் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நோட்டாவுக்கு அதிகமான ஓட்டு பதிவானாலும், அதற்கடுத்த இடத்தில் உள்ளவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இருந்தாலும் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் தேர்வில் கவனமாக இருக்கவும் இது உதவும். கடந்தாண்டு இறுதியில் நடந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிஜோரம் சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவாயின.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து