தி.மு.க. வேட்பாளர்கள் யார்? பட்டியல் நாளை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      தமிழகம்
Anna in arivalayam 2017-12 31

சென்னை, தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நாளை 17-ம் தேதி வெளியிடப்படும் என்றும், அதே நாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. கூட்டணி தொகுதிகளை அறிவித்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 17-ம் தேதி வெளியாகும். அதே நாளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும். தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு தனியாகவும், சட்டசபை இடைத்தேர்தலுக்கு தனியாகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும். இனி வரும் பிரசாரக் கூட்டங்களிலும் கூட்டணி தலைவர்கள் ஒன்றாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கி உள்ளோம். அத்துடன் பாராளுமன்ற மேல்சபையிலும் ஒரு எம்.பி.பதவி வழங்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார். பேட்டியின்போது கூட்டணி கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து